வானியங்குடி - சிதம்பர விநாயகர்

வானியங்குடி - சிதம்பர விநாயகர்

Song


காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர்- வீடுகட்கு
அன்றைக்கு வந்திட்ட அம்மா இலக்குமி நீ
என்றைக்கும் நீங்கா திரு


March 11, 2012

திருநீறு பாடல்

திருநீறின் பெருமையை விளக்கும் பாடல் வரிகள்:

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே...


மந்திரமாவது நீறு - மந்திரங்களில் எல்லாம் சிறந்த மந்திரமாவது திருநீறு.
வானவர் மேலது நீறு - வானில் வாழும் தேவர்கள் எல்லாம் வணங்கி அணிவது திருநீறு.
சுந்தரமாவது நீறு - அழகு தரும் பொருட்களில் எல்லாம் மிகவும் அழகானது திருநீறு.
துதிக்கப்படுவது நீறு - பெரும் பெருமையுடையது என்று எல்லாராலும் துதிக்கப்படுவது திருநீறு.
தந்திரமாவது நீறு - இறைவனை அடையும் வழிகளில் (தந்திரங்களில்) எலலாம் மிகச் சிறந்த வழியாக விளங்குவது திருநீறு
சமயத்திலுல்ளது நீறு - சிவபெருமானை ஏத்தும் சைவ சமயத்தில் பெருமையுடன் போற்றப்படுவது திருநீறு.
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே - சிவந்த திருவாயினையுடைய உமையம்மையை இடப்பாகத்தில் கொண்டிருக்கும் திருவாலவாயான மதுரையம்பதியில் வாழும் சோமசுந்தரக் கடவுளின் திருநீறே.

இது தான் தினசரி நாம் அணியும் திருநீரின் பெருமையை விளக்கும் பாடல் ஆகும்.

January 16, 2012

NAGARATHAR - HISTORY (நகரத்தார்கள் - வரலாறு)

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். தமிழின் முதல் மாதமான தை மாதத்தில் நமது வலைதளத்தின் இந்த முதல் பதிவை எழுதுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த பதிவில் நகரத்தார்களின் வரலாறு பற்றியும், கோவில்கள் பற்றியும் நான் படித்த மற்றும் தெரிந்த செய்திகளை எழுதி உள்ளேன். உங்கள் கருத்துக்களை தவறாமல் எனக்கு மின் அஞ்சல் செய்யவும்.

நகரத்தார்கள் - வரலாறு

    நம் சமூகத்தை சேர்ந்தவர்கள் நகரத்தார்கள் அல்லது நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என அழைக்கப்படுகிறார்கள்.  உலகின் பல இடங்களில் வசித்து வரும் (பெரும்பாலும் தமிழ்நாட்டில்) நகரத்தார்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய பத்து லட்சம் ஆகும். ஏறக்குறைய 5100 வருடங்களுக்கு முற்பட்ட இனம் நமது இனம் ஆகும்.



நகரத்தார்கள் முதலில் தொண்டை மண்டலத்தில் (காஞ்சி) வசித்து வந்தனர். பின்னர் சோழ நாட்டில் உள்ள காவிரிப்பூம்பட்டினம் என்ற இடத்தில் சோழ மன்னரின் ஆணைப்படி அங்கு சென்று வசித்து வந்தனர். பின்னர் அங்கிருந்து இடம் பெயர்ந்து பாண்டி நாட்டிற்கு வந்தனர். பாண்டி நாட்டு மன்னர் வேண்டுகோளின் படி காரைக்குடி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை நகரை சுற்றி உள்ள 9 கிராமங்களில் வசித்து வந்தனர். இதுதான் தற்போது வரை நகரத்தார் வசிக்கும் இடமாக உள்ளது . இப்படி வசித்து வந்த பகுதிகள் பின்னர் செட்டிநாடு என அழைக்கப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல பல இடங்களில் தொழில் நிமித்தம் சென்று வசித்து வந்தனர். அக்காலத்தில் நம் சமூகத்தினர் பர்மா, இலங்கை, மலேசியா என கடல் தாண்டி பல இடங்களில் வணிகம் செய்து வந்தனர். இன்றும் நம்மவர்கள் உலகின் பல இடங்களில் பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நகரத்தார்கள் தொடக்கத்தில்  வசித்து வந்த  9 கிராமங்களின் அடிப்படையில், ஒரு ஊரில் ஒரு சிவபெருமான் ஆலயம் வீதம் ஒன்பது கிராமங்களிலும் 9 சிவபெருமான் கோவில்கள் கட்டப்பட்டன. பின்னர் இந்த கோவில்கள் மூலம் 9 பிரிவுகள் தோன்றியது. 


நகரத்தார்களின் ஒன்பது கோவில்கள்:

இந்த ஒன்பது கோவில்களை கொண்டு ஒன்பது பிரிவுகளும் அதில் சில உட்பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டது. அந்த உட்பிரிவுகள் அடைப்பு குறிக்குள் கொடுக்கப்பட்டு உள்ளது.இந்த அனைத்து கோவில்களிலும் சிவபெருமான் மற்றும் இறைவியை அடிப்படையாக கொண்டு வழிபட்டு வந்தனர்.
1.பிள்ளையார்பட்டி
2.மாத்தூர் (உட்பிரிவுகள்: உறையூர்,அரும்பாக்கூர், கண்ணுர், கருப்பூர்,குளத்தூர்,மண்ணூர், மணலூர்)
3.இளையாத்தங்குடி (உட்பிரிவுகள்: கழனி வாசர்க்குடையார், கின்கினிக் கூருடையார், ஓக்குருடையார், பட்டனச் சாமியார், பெருசெந்துருடையார், சிறுசெந்துருடையார், பெரு மருதுருடையார்)
4.சூரக்குடி 
5.வைரவன்  கோவில் (உட்பிரிவுகள்: கழனி வாசற்க்குடையார், மருதென்திரபுரம், பெரிய வகுப்பு, பிள்ளையார் வகுப்பு, தெய்யானர் வகுப்பு)
6.இரணிக் கோவில் 
7.நேமங் கோவில்

8.இலுப்பைக்குடி
9. வேலங்குடி 

இந்த ஒன்பது கோவில்களின் இறைவன் மற்றும் இறைவியின் பெயர்கள் வருமாறு:

வரிசை எண்
 கோவில் பெயர்
இறைவன் பெயர் 
இறைவி பெயர் 
 1
மாத்தூர்
அருள்மிகு 
ஐந்நூற்றீஸ்வரர் 
அருள்மிகு 
பெரியநாயகி 
 2
 பிள்ளையார்பட்டி
அருள்மிகு
திருவீசர்  & மருதீசர் &
கற்பக பிள்ளையார் 
அருள்மிகு 
சிவகாமி &
வாடாமலர் மங்கை 
3
இளையாத்தங்குடி 
அருள்மிகு கைலாசநாதர் 
அருள்மிகு நித்யகல்யாணி 
4
சூரக்குடி 
அருள்மிகு
தேசிகநாதர் 
அருள்மிகு 
ஆவுடைநாயகி 
 5
வைரவன்  கோவில்  
அருள்மிகு 
வளரொளிநாதர் 
அருள்மிகு 
வடிவுடையம்மை 
6
இரணிக் கோவில்  
அருள்மிகு 
ஆட்கொண்டநாதர் 
அருள்மிகு 
சிவபுரன்தேவி
7
நேமங் கோவில் 
அருள்மிகு 
ஜெயங்கொண்ட சோழீஸ்வரர் 
அருள்மிகு 
சௌந்தரநாயகி 
8
இலுப்பைக்குடி
அருள்மிகு 
தான்தோன்றீஸ்வரர் 
அருள்மிகு 
சௌந்தரநாயகி 
 9
வேலங்குடி 
அருள்மிகு
கண்டீஸ்வரர் 
அருள்மிகு
காமாட்சி அம்மை 

நகரத்தார்கள் வசித்து வரும் பெரும்பாலான ஊர்கள் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சுற்றி உள்ள ஊர்களே ஆகும். நமது சோழபுரம் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  சோழபுரம் நகரத்தார்களின் பெரும் பகுதியினர் மாத்தூர் - உறையூர் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல தகவல்கள் அடுத்து வரும் பதிவுகளில்...நன்றி!!!