வானியங்குடி - சிதம்பர விநாயகர்

வானியங்குடி - சிதம்பர விநாயகர்

Song


காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர்- வீடுகட்கு
அன்றைக்கு வந்திட்ட அம்மா இலக்குமி நீ
என்றைக்கும் நீங்கா திரு


அறிமுகம்



நகரத்தார்கள் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்கள் மற்றும் இணையம் மற்றும் புத்தங்களில் நான் படித்த தகவல்களை நம் சமூகத்தினருடன் இந்த வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். இதன் முக்கிய நோக்கமே நமது பூர்விகம்,பண்பாடு, பழக்க வழக்கங்கள், சடங்குகள் (திருமண முறைகள்,படைப்பு மற்றும் பல) என இவை அனைத்தையும் பற்றி  நம் சமூகத்தின் இளைய தலைமுறைக்கு இணையம் மூலம் கொண்டு செல்வதே ஆகும். இன்றைய நவீன உலகில் புத்தகங்களில் படித்து தகவல்களை அறிந்து கொள்ள நேரமின்றி உழைக்கிறோம். இதனால் நமது நடைமுறைகள்,பாரம்பரியங்கள் என அனைத்தும் இன்றைய நவீன உலகில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதை மாற்றி இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்  ஒரு தொடக்கம் தான் நமது இந்த சோழபுரம் நகரத்தார்கள் வலைத்தளம். (Solapuram-Nagarathargal - http://solapuram-nagarathargal.blogspot.com) . குறிப்பாக சோழபுரம் நகரத்தார்களை பற்றியும் அவர்களது படைப்பு,கோவில் செய்திகள் பற்றியும் இதில் பதிவிட உள்ளேன்.

மேலும் நீங்கள்  நகரத்தார்கள் பற்றி படித்த,கேட்ட அல்லது தெரிந்த தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நான் பதிவிடும் செய்திகளில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை சுட்டிக்காட்வும். உங்களின் மேலான கருத்துகளையும் எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

 
சோழபுரம் நகரத்தார்கள் பற்றி உங்களிடம் உள்ள தகவல்கள், நீங்கள் அறிந்த தகவல்கள், வழிபாட்டு முறைகள், நடை முறைகள் போன்றவற்றையும் எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என உங்களை கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல்கள் நமது வலைதளத்தின் மூலம் இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவும். 

எனது மின் அஞ்சல் முகவரி : malaianna@gmail.com

No comments:

Post a Comment